search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே மேம்பாலம்"

    • செயற்குழு கூட்டத்திற்கு. மண்டல தலைவர் தூசிமுத்து தலைமை தாங்கினார்.
    • தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    ஆறுமுகநேரி:

    பாரதீய ஜனதா கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மண்டல செயற்குழு கூட்டம் ஆறுமுக நேரியில் நடைபெற்றது. மண்டல தலைவர் தூசிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலா ளர் தங்கபாண்டி யன், துணைத் தலைவர் கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் ராஜவேலன் வரவேற்று பேசினார்.

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன், பொதுச்செய லாளர் சிவமுருக ஆதித்தன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகர், ஆறுமுகநேரி நகர தலைவர் முருகேச பாண்டியன், ஓ. பி.சி. அணி துணைத் தலைவர் மகேஷ், பாலாஜி, ஜெயக்குமார், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆறுமுகநேரி ரெயில்வே கேட் அடைக்கப்படும் நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெருக் கடியை போக்க மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என்றும், ஆறுமுகநேரியில் கூடுதல் மின் கம்பியா ளர்களை நியமிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பேரூராட்சியில் புதிதாக குடிநீர் இணைப்புகள் வழங்குவதில் உள்ள குறைபாடுகளை தவிர்க்க வலியுறுத்தியும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    • கொழுமம், பழநி செல்லும் ரோடு,18.80 கி.மீ., தூரம் கொண்டது.
    • பொதுமக்கள், வாகனங்கள் என போக்குவரத்து அதிகம் செல்லும் ரோடாக உள்ளது.

    உடுமலை :

    உடுமலையில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து கொமரலிங்கம், கொழுமம், பழநி செல்லும் ரோடு, 18.80 கி.மீ., தூரம் கொண்டது. உடுமலையிலிருந்து பழனிக்கு மாற்றுப்பாதையாக மாநில நெடுஞ்சாலைத்துறை ரோடு உள்ளது. பொதுமக்கள் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் என போக்குவரத்து அதிகம் செல்லும் ரோடாக உள்ளது.

    இந்த ரோட்டில் நகர பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. பிரதான போக்குவரத்து சாலையாக உள்ளதால் போக்குவரத்து நெரிசலும் நிரந்தரமாக உள்ளது. எனவே இந்த ரோட்டை அகலப்படுத்த வேண்டும்.மேலும் திண்டுக்கல்-பாலக்காடு அகல ரெயில்பாதை செல்கிறது. அகல ரெயில்பாதையில் ரெயில்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் அவை கடக்கும் போது பல கி.மீ., தூரத்திற்கு வாகனங்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே கொழுமம் ரோட்டை அகலப்படுத்தவும், ரெயில்வே கேட் பகுதியில்மேம்பாலம் அமைக்கவும் வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    மதுரையில் இருந்து பரமக்குடி செல்லும் நான்கு வழிச்சாலையில் திருப்புவனம் ரெயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதியில் தற்போது போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு அந்த வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.
    திருப்புவனம்:

    மதுரை-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் முதற்கட்டமாக மதுரை ரிங் ரோட்டில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் தரை வழியாக சாலைகள் அமைக்கும் பணி சில பகுதிகளில் நிறைவு பெற்றுள்ளது. ஆனால் இந்த சாலையில் ரெயில்வே இணைப்பு சாலை பல இடங்களில் வருவதால் அந்த இடங்களில் மட்டும் உயர் மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்றன. அதில் ஒரு சில இடங்களில் மட்டும் இந்த பணிகள் தாமதமாக நடந்து வந்தன.

    இந்த உயர் மட்ட மேம் பாலம் கட்டும் போது இணைப்பு சாலையும் அமைக்கப்பட்டன. சில இடங்களில் இணைப்புச் சாலை வழியாகத்தான் நகருக்குள் செல்ல முடியும். உதாரணமாக திருப்புவனத்தில் கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பாலத்தின் வலதுபுறம் திருப்புவனம் நகருக்குள் செல்லும் இணைப்பு சாலை செல்கிறது. இந்த சாலை மூலம் மதுரையில் இருந்து வரும் நகர் மற்றும் புறநகர் பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் திருப்புவனத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன.

    இதேபோல் திருப்புவனத்தில் இருந்து மதுரை நோக்கி செல்லும் அனைத்து பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் இந்த உயர் மட்ட மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக வந்து தென்புறத்தில் அமைக்கப்பட்ட இணைப்பு சாலை வழியாக சென்று வருகிறது. திருப்பு வனம், ரெயில்வே மேம்பாலம் பணி நிறைவு பெற தாமதமானதால் பரமக்குடி, மானாமதுரை வழியாக மதுரை செல்லும் அனைத்து வாகனங்களும் நான்கு வழிச்சாலை வழியாக வந்து திருப்புவனம், புல்வாய்க்கரை சந்திப்பில் திரும்பி ரெயில்வே கேட் வழியாக திருப்புவனம் நகருக்குள் சென்று அதன் பின்னர் மதுரைக்கு செல்கின்றன.

    இதனால் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது மணலூரில் கட்டப்பட்ட மேம்பாலம் போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டதால் பயண நேரம் குறைந்துள்ளது. மேலும் திருப்புவனம் மேம்பாலத்தில் தற்போது இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் மேம்பாலத்தின் ஒருபகுதி போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டதால், மதுரையில் இருந்து மானாமதுரை, பரமக்குடி வழியாக சென்று வரும் அனைத்து வாகனங்களும் திருப்புவனம் மேம்பாலம் வழியாக ஊருக்குள் வராமல் நான்கு வழிச்சாலையில் சென்று வருகின்றன.

    மேலும் இடைநில்லா பஸ்கள் திருப்புவனம் நகருக்குள் செல்லாததால், பயண நேரம் குறைவாகவும், போக்குவரத்து பாதிப்பு இல்லாமலும் உள்ளது. இதனால் திருப்புவனம் நகருக்குள் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் சிறிது குறைந்துள்ளது.
    ×